2025 மே 10, சனிக்கிழமை

திருமலையில் 364பேருக்கு அபிவிருத்தி உத்தியோகஸ்தர் நியமனம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன், ரமன், பரீத்)


கிழக்கு மாகாணத்தில் 364பேருக்கு  அபிவிருத்தி உத்தியோகஸ்தர் தரம் மூன்றுக்கான நியமனம் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது. உவர்மலை வவேகாநந்தா கல்லூரியில் திங்கட்கிழமை 24.12.2012 காலை  இது வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரம, முதலமைச்சர் நிஜீப் ஏ.மஜீது ஆகியோர் இவற்றினை வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் மாகாண வீதி அபிவிருத்தி வீடமைபபு கிராமிய மின்சார அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, சுகாதார விளையாட்டு தொழில்நுடப கல்வி அமைச்சர் மன்சூர் ஆகியோரும் கலந்துகொண்டு கடிதங்களை வழங்கி வைத்தனர்.

உவர்மலைச் சந்தியில் வைத்து ஆளுநர், முதலமைச்சர் அமைச்சர்களை விவேகாநந்தா கல்லூரி வாத்திய குழுவினர் வரவேற்று கலையரங்கிற்கு அழைத்துச் சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X