2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

'சனல் - 4க்கு எதிராக சாட்சியமளிக்க 11,664 முன்னாள் போராளிகளும் தயார்'

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 02 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அமதோரு அமரஜீவ, எஸ்.எஸ்.குமார் )

இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள சனல் - 4 தொலைக்காட்சிக்கு எதிராக சாட்சியமளித்து, இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றுவதற்கு அரசாங்கத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொண்டுள்ள முன்னாள் போராளிகள் 11ஆயிரத்து 664பேரும் தயாராக உள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை சமூகத்தில் மீள்குடியேற்றவும் ஒன்றிணைக்கவுமான சமய சமூகத் தலைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வொன்று புனர்வாழ்வு ஆணையாளர் தலைமையதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் திருகோணமலையில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே புனர்வாழ்வு ஆணையாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது அதாவது நந்திக்கடல் களப்பு பகுதியிலிருந்து இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளே புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனர்.

அக்காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களுக்கு மத்தியில் ஆரம்பித்த இந்த புனர்வாழ்வு நடவடிக்கையினை தற்போதும் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றோம். இந்நிலையில் 594 சிறுவர் போராளிகள், 2,033 பெண் போராளிகள் மற்றும் 9,037 ஆண் போராளிகள் என 11,664பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் எம்மால் புனர்வாழ்வளிக்கப்படும் இந்த 11,664 முன்னாள் போராளிகளும், தங்களது வீடுகளுக்குச் செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். இதற்கான காரணம் அறியப்படாத பட்சத்திலேயே நாம் இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி தீர்வு காண முற்படுகின்றோம்' என்றார்.


  Comments - 0

  • sakeena uk Tuesday, 02 August 2011 08:47 PM

    நாடைக் காட்டிகொடுக்க யார்தான் விரும்புவார்கள்....

    Reply : 0       0

    aJ Tuesday, 02 August 2011 11:08 PM

    ஒரு சுதந்திர விசாரணைக்கு அனுமதித்து அதன் ஊடக அவர்கள் சாட்சி சொல்ல இவர்கள் தயாரா?

    Reply : 0       0

    NAKKIRAN Wednesday, 03 August 2011 12:21 AM

    அரசியல் கைதிகளை மிஸ் யூஸ் பண்ண வேண்டாம். அதுவே ஒரு போர் குற்றமாகிவிடும். முதலில் போர் குற்றம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள முயற்சிக்கவும் .

    Reply : 0       0

    ruban Wednesday, 03 August 2011 04:30 AM

    லண்டனுக்கு அனுப்பி சாட்சி சொல்ல விடுங்கோ பார்ப்பம்.

    Reply : 0       0

    reemco Wednesday, 03 August 2011 06:06 AM

    அவர்களால் சொல்லப்படும் உண்மையை நாம் பொய் என்று மறுப்புத் தெரிவித்தால் அது ஒருதலைப் பட்சமாகி விடும்.

    Reply : 0       0

    Janan Wednesday, 03 August 2011 07:40 AM

    இலங்கை இல் பிறந்து , படித்து , வளர்ந்த எந்த ஒரு நல்ல குடி மகனும் தன் தாய் நாட்டை காட்டி கொடுக்க மாட்டார்கள் , அப்படி செய்வதால் தண்டனை அனுபவிக்க போவது MR மட்டும் அல்ல இந்த நாட்டில் வாழும் அணைத்து மக்களுமே....... இதனால் புலம் பெயர் புலி உறுப்பினர்கள் கஷ்டம் அனுபவிக்கபோவது இல்லை , அவர்கள் தங்களது சுகபோக வாழ்க்கை தொடர இது உதவலாம் ..... நீங்கள் அனைவரும் கடவுளை நம்பினால் அவரிடம் கேளுங்கள் அவர் சரியான தண்டனை கொடுப்பார் ... மனிதனால் மனிதனுக்கு தண்டனை கொடுக்க முடியாது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .