2025 மே 02, வெள்ளிக்கிழமை

மூதூரில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட 56 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 25 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன், ரமன்)


மூதூர் கிழக்கு, சந்தோசபுரம், சீதனவெளி என்னும் இடத்தில் இராணுவத்தால் அமைக்கப்பட்ட 56 வீடுகளும் இன்று புதன்கிழமை காலை பயனாளிகளிடம் கையிளக்கப்பட்டன. மீள்குடியேற்ற அமைச்சின் 16.7. மில்லியன் ரூபாய்கள் நிதி வழங்கலில் இலங்கை  இராணுவத்தினரால் இவ்வீடுகள் கட்டப்பட்டன. ஒவ்வொரு வீடும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியுடையவை.

2006ஆம் வருடம் இடம்பெற்ற இடம்பெயர்வு காரணமான தமது வீடுகளை இழந்த நலன்புரி முகாம்களிலும் உறவினர் வளவுகளிலும் தங்கியிருந்த 56 குடும்பங்களே இவ்வாறு வீடுகளைப் பெற்றுள்ளன.

பட்டித்திடல் நலன்புரி நிலையத்தில் உள்ள 20 குடும்பங்கள், கிளிவெட்டி நலன்புரி நிலையத்தில் உள்ள 19 குடும்பங்கள், கட்டைபறிச்சானில் உள்ள ஒரு குடும்பம்,  சந்தோசபுரத்தில் வதியும் 16 குடும்பங்களே இவ்வாறு வீடுகளைப் பெற்றுக்கொண்டுள்ளன.

கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ்வீடுகளை பயனாளிகளிடம் வழங்கி வைத்தார்.

இதில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சபை பிரதி தலைவர் ஆரியவதி கலபதி, மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பந்துசேன, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா, கிழக்கு மாகாண இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா ஆகியோரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீடுகளின் ஆவணங்களை சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைத்தனர்.

\


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X