2025 மே 03, சனிக்கிழமை

ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் 6 எஸ் திட்டம்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 24 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)


பாடசாலை வள அபிவிருத்தி முன்னேற்றத் திட்டமான ஜப்பானிய ஜெய்கா திட்டத்தை அடிப்படையாகக்கொண்ட 6 எஸ் திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் இச்செயற்றிட்டத்தின் முதல் அங்கமான 'செய்றி' என்ற தூய்மைப்படுத்தலும் தேவையற்றவற்றை நீக்குதலும் என்ற செயற்பாடு இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

செயற்றிட்ட தேசிய இணைப்பாளர் திரு.பாபு முன்னிலையில் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு வளாகத்தில் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் பெற்றேர்களின் பங்களிப்புடன் இது நடைமுறைப்படுத்தப்பட்டது.

2012ஆம் ஆண்டு இலங்கை முழுவதும் உள்ள தமிழ், சிங்கள பாடசாலைகள் 10 மத்திய கல்வி அமைச்சினால் மேற்படி 6 எஸ் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X