2025 மே 08, வியாழக்கிழமை

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்கு 7,360 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு: அமைச்சர் பசில்

Super User   / 2011 ஓகஸ்ட் 29 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்கு 7,360 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாகா மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கும் 20 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இக்கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கிழக்கு  மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம,  கிழக்கு  மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சநதிரகாந்தன், பிரதி அமைச்சர்களான சுசந்த புஞ்சிநிலமே, நிர்மல் கொத்தலாவ, எம்.கே.டி.எஸ்.குணவர்தன நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக், எல்லாவல மேதானந்த தேரர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்லா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அரசாங்கத்தினால் திருகோணமலை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் சுமார் 18 திட்டங்கள் பற்றி இக்கூட்டத்தில் கலந்துரையடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X