2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இலங்கை மீனவர்கள் 89 பேருக்கும் விளக்கமறியல்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சிங்காரவேலு சசிகுமார்


சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் 89 பேரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை பதில் நீதவான் திருச்செந்தில்நாதன் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை கடற்பரப்பில் வைத்தே இவர்கள் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இந்த 89 பேரையும் நீதவான் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்திய போதே அவர் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். இவர்களிடமிருந்து 13 படகுகளும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .