2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'அபிவிருத்திப் பணிகள் நிறைவுறும் தறுவாயில்'

Thipaan   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

கிழக்கு மாகாணத்திலுள்ள பின்தங்கிய கிராமங்களின் அபிவிருத்திக்கென, 2016ஆம் ஆண்டில் 105 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டதாகத் தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அகமட், அந்நிதியைக் கொண்டு செய்யப்படும் அபிவிருத்திப் பணிகள் நிறைவுறும் தறுவாயில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபையின் 65ஆவது அமர்வு, பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா தலைமையில் கிழக்கு மாகாண சபையில், இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்றது.

கேள்வி பதில் நேரத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எஸ்.உதுமாலெப்பை எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தின், கந்தளாய் பிரதேச செயலகப்பிரில் உள்ள கல்கஸ்வௌ என்ற பிரதேசத்துக்கு 10 மில்லியன் ரூபாயும் ஈச்சலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உப்பூரல் கிராமத்துக்கு 8.5 மில்லியன் ரூபாயும் பட்டிணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாங்காயூற்று கிராமத்துக்கு 8.5 மில்லியன் ரூபாயும் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பட்டிக்குடா கிராமத்துக்கு 8.5 மில்லியன் ரூபாயுமாக, திருகோணமலை மாவட்டத்துக்கு மட்டும் மொத்தமாக 35.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .