2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'அபிவிருத்திருக்கு ஆளுநரின் தலையீடு தடையாகவுள்ளது'

Suganthini Ratnam   / 2016 ஜூன் 22 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு மாகாண ஆளுநரின் தலையீடு தடையாகவுள்ளது என அம்மாகாண முதலமைச்சர்; செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்;.

கிழக்கு மாகாண சபையின் அமர்வு தவிசாளர் சந்திரதாச கலபதி தலைமையில் செவ்வாய்;க்கிழமை (21) நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தற்போது கிழக்கு மாகாண சபையால் எந்தச் சேவையையும் சரியாகச் செய்ய முடியாத இக்கட்டான நிலைமையை ஆளுநர் உருவாக்கியுள்ளார் எனவும் அவர் கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'கிழக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்தித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. ஆனால், அவற்றை மேற்கொள்ளவோ, இம்மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கவோ ஆளுநர் ஆதரவு வழங்காமல் முடக்கிவிட்டுள்ளமை மாகாண சபையின் ஆட்சியைக்; கேள்விக்குறியாக்கியுள்ளது' என்றார்.

'ஏனைய மாகாணங்களின் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், உறுப்பினர்கள் தங்களின்; சேவைகளைச் செவ்வனே செய்துகொண்டு போகும்போது, இம்மாகாணத்தில்; மட்டும் ஆளுநரின் தலையீடு காரணமாக மிகவும் மோசமான நிலைமை  ஏற்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்கது.

இந்த நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்புவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கையில், ஆளுநரின் இவ்வாறான செயல் நல்லாட்சியை இம்மாகாணத்தில்; வீழ்த்திவிடும் நிலைமை உருவாகுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இம்மாகாணத்தின் அபிவிருத்திக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஆளுநர் முன்வர வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X