Niroshini / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.என்.எம்.புஹாரி
இலங்கை அரசியல் அமைப்பில் மாற்றங்களை கொண்டுவர முயற்சிகளை மேற்கொள்ளும் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை தாம் பாராட்டுவதோடு, தமிழ் மொழிக்கு சம உரிமையையும் அந்தஸ்தையும் வழங்க வேண்டும் என மூதூர் பிரஜைகள் குழுவின் தலைவர் சிவஸ்ரீ இ.பாஸ்கரன் குருக்கள் தெரிவித்தார்.
உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு மூதூர் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மூதூர், சம்பூர் பிரதேசங்களில் கடந்த கால யுத்த சூழ்நிலையின் போது காணாமால்போனவர்களின் பிள்ளைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (21) பாரதிபுரம் கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் வைத்து கற்றல் உபகரங்கள் வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
எமது தாய் மொழியான தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழியாகும். இதனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம் அனைவரினதும் தலையாய கடமையாகும். தாய் மொழி தன் இனத்தின் பரிணாமத்தை எடுத்துக் காட்டுகின்றது.
அந்த வகையில், அதனை முறையாக கற்க வேண்டியவர்களாகவும் நாம் இருப்பதோடு அந்தந்த தாய் மொழி அவ் இனத்தின் விடுதலைக்கு முக்கியமானதொன்றாகவும் காணப்படுகின்றது என்றார்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026