Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன் ஆனந்தம்
'எனது கணவர் படுகொலை செய்யப்பட்டு, சுமார் 15 வருடங்களாகிவிட்டன. அன்றிலிருந்து பல சிரமங்களுக்கு மத்தியில் எனது பிள்ளைகளை வளர்த்து வருகின்றேன். இந்நிலையில், இழப்பீடு நீதி என்று கொழும்புக்கு அலையும் நிலையில் நான் இல்லை. அலைந்து அலைந்து சோர்ந்து போன நிலையில் நாம் உள்ளோம். அதற்கான அலுவலகங்கள் எமது பகுதியில் செயற்பட வேண்டும்' என, தனது கணவனை மோதலில் பறி கொடுத்த மனைவியான ந.கலாமதி (வயது 40) தெரிவித்தார்.
நல்லிணக்கப் பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் அமர்வு, திருகோணமலை, மூதூர் நகரில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது,
எனது கணவரான வேதாச்சலம் நடேஸ் என்பவர் பச்சனூர் வயலில் வைத்து 2001.12.10 அன்று, சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் மூதூர் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு விசாரணைகளின் பின்னர் என்னிடம் கையளிக்கப்பட்டது.
எனக்கு அப்போது 24 வயது, எனது இரண்டு ஆண் பிள்ளைகளையும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியல் நான் 20வருடமாக சிரமப்பட்டு படிப்பித்திருக்கிறன். பொலிஸ் பதிவுகள் இருக்கின்றன. எந்த இழப்படுகளும் வழங்கப்படவில்லை.
இழப்பீடுகளை பெறுவதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரையில்லை. இதுபோன்று தான், காணாமல் போனவர்களும் அவர்களது நிலமையும் உள்ளன. இந்நிலைமையில், இவற்றுக்கான நீதி மற்றும் இழப்பீடுகளை கொழும்புக்குச் சென்று பெறும் நிலலமையில் எமது குடும்ப நிலமைகள் இல்லை.
அற்கான சூழல் வசதி வாய்ப்புகளும் எமக்கில்லை. இருந்ததெல்லாவற்றையும் இழந்து நிற்கும் எமக்கான நீதி மற்றும் பொறிமுறைகள் நடைமுறைக்குச் சாத்தியமான வகையில் எமது மாவட்டத்திலேயே அமைதல் வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
38 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago