Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் யாரும் அரசியல் செய்யாமல் ஒன்றிணைந்து மாகாணத்தின் ஆசிரியர் குறைபாட்டை நிவர்த்தி செய்யவேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
நேற்று (06) இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வின்போது மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனனினால் 2016ஆம் ஆண்டு கல்வியியல் கல்லூரிகளில் இருந்து வெளியாகிய கிழக்கு மாகாண ஆசிரியர்கள் அனைவரையும் கிழக்கு மாகாணத்திலேயே நியமிப்பதற்கான அவசரப் பிரேரணை முன்மொழியப்பட்டது.
இது தொடர்பாக அவர் உரையாற்றுகையில், 'இந்த அவசரப் பிரேரணையானது கிழக்கு மாகாண பிள்ளைகளின் கல்வி நலனை கருத்திற் கொண்டு தகுந்த நேரத்தில் சமர்பிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கிழக்கு மாகாணத்தின் மூதூர் வலயம், கல்குடா வலயம், மட்டக்களப்பு மேற்கு வலயம், பட்டிருப்பு வலயத்தின் போரதீவுப்பற்றுக் கல்விக் கோட்டம் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்பது மிகவும் அதிகமாக நிலவும் இந்த காலகட்டத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்வியியல் கல்லூரிகளில் கற்கைநெறிகளினை பூர்த்தி செய்த ஆசிரிய நியமனம் பெற்றவர்கள் பிற மாவட்டங்களில் கற்பிப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கிழக்கு மாகாணத்திலே ஆசிரிய பற்றாக்குறை இருப்பது கல்வி அமைச்சுக்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் நன்கு தெரிந்திருந்தும் கல்வியியல் கல்லூரிகளில் கல்வி கற்ற ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் இசுறுபாயவில் நியமனம் வழங்கப்பட போகின்றது என்பதை அறிந்தும் கூட நாங்கள் இந்த பிழையை விட்டிருக்கின்றோம்.
இன்று இந்த சபையிலே எதிர்கட்சி தலைவர் அவர்கள் ஆற்றிய உரையினை நான் முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்வதுடன் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு இன்றிலிருந்து (06.10.2016) பதினான்கு நாட்களுக்குள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட பாடசாலைகளில் கடமைகளை பொறப்பேற்க வேண்டும். சிலர் தமது சுயவிருப்பின் பெயரில் வெளி மாகாணங்களுக்கு தொழில் புரிய சென்றுள்ளார்கள். அவர்களைத் தவிர ஏனைய ஆசிரியர்களை முதலமைச்சரும் கல்வி அமைச்சரும் துரிதமாக செயற்பட்டு அவர்களை மீண்டும் கிழக்கு மாகாணத்திற்கு கொண்டு வரவேண்டும்.
கிழக்கு மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களிற்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை இன்று மாகாண சபை அமைச்சுக்கு வரச்சொல்லி இருப்பதாhக அறிவதுடன் அவர்கள் வந்திருப்பதாகவும் அறிகின்றோம். இது பற்றி கல்வி அமைச்சரிடம் வினவிய போது இதுபற்றி தனக்கு தெரியாது என்று கூறுகின்றார். தயவுசெய்து இதில் யாரும் அரசியல் செய்யாமல் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து எமது மாகாணத்தில் உள்ள ஆசிரிய குறைபாட்டை நிவர்த்தி செய்ய வேண்டும்.
இந்த ஆசிரியர்களை மிகவும் கஷ்;டப்பிரதேச பாடசாலைகளுக்கு நியமிக்க வேண்டும். அங்கிருக்கும் மாணவர்களுக்கும் இலவசக்கல்வி சென்றடைய வேண்டும். அதனை அனைத்து மாகாண சபை உறுப்பினர்களும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களை கல்வி அமைச்சரும் முதலமைச்சரும் கொண்டுவருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது' எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
27 minute ago