2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

இருவேறு விபத்துகளில் மூவர் காயம்; சாரதி கைது

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 04 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, உப்புவெளி மற்றும் தலைமையக பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் படுகாயமடைந்த நிலையில் இன்று (04) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரச் சந்தியில் சைக்கிளில்  பயணித்துக்கொண்டிருந்தவருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் எம்.வரதராஜா (78 வயது) படுகாயமடைந்துள்ளார்.

இவ்விபத்துடன் தொடர்புடைய சாரதியை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இருவருடன் பயணித்த  மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியதில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மொறவௌ, சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த கே.ரமேஸ்குமார் (33 வயது) மற்றும் டி.வினோத்குமார் (31 வயது) ஆகியோரே காயமடைந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துகள் தொடர்பில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X