Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார், அப்துல்சலாம் யாசீம்,எஸ்.சசிக்குமார்
கடந்த 60 வருடகாலமாக இலங்கையுடன் அமெரிக்கா பல்வேறு பணிகளில் இணைந்துகொண்டதையிட்டு மகிழ்ச்சி அடைவதுடன், தொடர்ந்தும் இலங்கையின் நிலை பேறான பல அபிவிருத்தித்திட்டங்களுக்கு அமெரிக்கா உதவவுள்ளது. இதைத் தெரிவிப்பதில் தாம் பெருமிதம் கொள்வதாக அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் தோமஸ் சனொன் தெரிவித்தார்.
திருகோணமலை, அலஸ்தோட்டக் கிராமத்திலுள்ள அமரநாத் லேக் ஹோட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்ணான்டோ, மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'விவசாய அபிவிருத்தி, சுகாதாரம், கல்வி, ஜனநாயகம், பொருளாதார வளர்ச்சி, நல்லாட்சி, மனிதநேய நடவடிக்கை போன்றவை தொடர்பான நிகழ்ச்சிகள் நாடெங்கிலும் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த 60 வருடங்களில் இலங்கை எட்டியுள்ள வெற்றிகளை கண்டு நாம் மகிழ்ச்;சி அடைகிறோம். தொடர்ந்தும் அனைத்து இலங்கையர்களுக்கும் சேவை வழங்கக்கூடிய வகையில் சிறந்த சிவில் சமூகம் மற்றும் வினைத்திறன் மிக்க அரசாங்கத்துக்கு நாம் உதவுவோம்' என்றார்.


2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago