Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக், பதுர்தீன் சியானா,பொன்ஆனந்தம்
நல்லாட்சி அரசாங்கம், உயர்கல்விக்காக அதிகமான நிதியினைனையும் வெளிநாடுகளில் கல்வி கற்பதற்கான புலமைப் பரிசில்களையும் அறிமுகப்படுத்திவருகின்றது, என உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
திருகோணமலை, கேணேசபுரியில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில், 253 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மாணவர் விடுதி, கணினிக் கூடம் மற்றும் ஆய்வு கூடம் போன்றவன்றின் திறப்பு விழா, நேற்று வெள்ளிக்கிழமை(19) நடைபெற்றது.
அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு உரையாற்றுகையில்,
'தற்போது இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் தரத்தினையும் மேம்பாட்டினையும் வளப்படுத்த புதிய திட்டங்களை அமுல்படுத்தவுள்ளதோடு, மாணவர்கள் படித்து முடித்து விட்டு வீதியில் இறங்கும் கலாசாரத்துக்;கு முடிவு கட்டப்படும்.
முன்னைய அரசாங்கத்தினால் தான் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். நல்லாட்சி அரசாங்கத்தில் மாணவர்களின் கருத்துகளும் ஏற்றுக்கொள்ளப்படும். வடக்கு மாகாணத்தில் ஒரு பல்கலைக்கழகத்தினையும் கிழக்கு மாகாணத்தில் ஒரு பல்கலைக்கழகத்தினையும் தெரிவுசெய்து, ஆய்வு கூடங்கள் மற்றும் இதர வசதிகளையும் மேம்படுத்தப்படும்.
பெற்றோரின் எதிர்பார்ப்புகளை பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டும், சமூகத்தில் உங்களால் பிரயோசனம் அடைய நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இலங்கையின் இலவசக் கல்வியை சரியான முறையில் கற்க வேண்டும். இந்தியா போன்ற வெளிநாடுகளில் தனியார் கல்விக்கே அதிகமான முக்கியத்துவமும் முன்னுரிமையும் வழங்கப்படுகின்றது.
நாட்டில் நிலவிய முப்பது வருட யுத்தம் நிறைவு செய்யப்பட்டு, பல தேர்தல்கள் எல்லாம் வைக்கப்பட்டு, ஜனாதிபதியின் மற்றும் பிரதமரின் சிறந்த ஆட்சியமைப்போடு நாடு கொண்டு செல்லப்படுகின்றது.
கடந்த ஆட்சிக் காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தவறுகளை ஒரு கணம் பின்நோக்கி பார்க்கப்படல் வேண்டும். அப்படியானால் தான் ஆட்சி வேகம் நோக்கிச் செல்கின்ற முறையை ஒப்பிடலாம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
18 May 2025