2025 மே 19, திங்கட்கிழமை

'எமது காணிகளில் செய்கை பண்ண முடியாதுள்ளது'

Thipaan   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்

'நாங்கள், கடந்த 1967ஆம்ஆண்டு காலப்பகுதியிலிருந்து செய்கை பண்ணி வந்த காணிகளில், நாம் பயிரச் செய்கை பண்ண முடியாதுள்ளது. இதற்கான நீதியும் உண்மையையையும் கண்டறிந்து தீர்வு தரப்பட வேண்டும்' என, கிண்ணியா வாழைப்பாடு விவசாயிகள் சார்பாகக் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட விவசாய சம்மேளனத்தலைவர் ஏ.எம். உமர்லெப்பை குறிப்பிட்டார்.

வாழைப்பாடு விவசாய சம்மேளனத்தின் தலைவரான அவர், நேற்றுச் செவ்வாய்க்கிழமை மாலை மூதூரில் நடைபெற்ற தேசிய நல்லிணக்கத்துக்கான கலந்தாலோசனை செயலணியின்முன் ஆஜாரான போதே மேற்படி கோரிக்கையைத் தெரிவித்தார்.

கிண்ணியாவிலிருந்து சுமார் 18 கிலோமீற்றர் தூரத்தில் வாழைப்பாடு வயல் பகுதி உள்ளது. இங்கு சுமார் 813 ஏக்கரில்,; 1967 மற்றும் 1970ஆண்டுகாலப்பகுதியில் நாம், விவசாயம் செய்து வந்தோம்.

அருகிலுள்ள சிங்கள சகோதரர்களால் பிற்காலத்தில் அச்சுறுத்தல் இருந்து வருவதனால், வயலில் செய்கை பண்ணமுடியாத நிலமை ஏற்பட்டுள்ளன. மறைந்த அமைச்சர் மர்ஹூம் அப்துல் மஜீதின் காலத்தில் அவற்றுக்கான ஒப்பங்கள் வழங்கப்பட்டிருந்தன. பிற்காலத்தில் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவினால் அவை எடுக்கப்பட்டன.

ஆனாலும், கடந்த 1987ஆம் ஆண்டுகாலம் வரை செய்கை பண்ணிய நிலையில், பின்னர் ஏற்பட்ட யுத்த சூழலால் முடியாதுபோனது. பின்னர் யுத்தம் நிறைவடைந்த நிலையில் அங்கு நாம் சென்று செய்கை பண்ண ஆரம்பித்த போது, சிங்கள மக்களால் எதிர்ப்பு காட்டப்படுகின்றது.

இது தொடர்பாக நாம் அண்மையில் சம்பூருக்கு விஜயம் செய்த ஜனாதிபதியின் கவனத்துக்;கும் கொண்டு வந்தோம். அவரது அறிவுறுத்தலுக்கமைய சிலநடவடிக்கை இடம்பெற்றது. ஆனாலும் சகலருக்கும் தீர்வு கிடைக்கவில்லை.

இந்நிலையில், இந்தக் காணி தொடர்பான பிரச்சனைக்கு, ஓர் இணக்கக் குழுவை நியமித்து உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். அதனூடாக பாதிக்கப்பட்ட எமது விவசாயிகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். சிங்கள விவசாயிகளின் அச்சுறுத்தல் நிறுத்தப்பட வேண்டும்' எனவும்  எனவும் கோரிக்கை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X