Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடம் காணப்படுகின்றபோது கல்விக் கல்லூரிகளிலிருந்து வெளியேறும் ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறையாக காணப்படும் பாடசாலைகளுக்கு நியமித்து ஆசிரியர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்யமால் எமது மாகாணத்தின் வளங்களை வெளி மாகாணத்திற்கு வழங்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 'சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலைகளில் 267 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதுடன், கஷ்டப் பிரதேசத்தில் அதிகமான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. கல்வி கல்லூரியிலிருந்து வெளியேறுகின்ற ஆசிரியர்களை எங்களுடை கிழக்கு மாகாணத்தில் நியமிக்கமால் வெளி மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கு நியமிப்பதை எக்காரணத்தை கொண்டும் நாங்கள் அனுமதிக்க முடியாது ஏற்றுக் கொள்ளவும் முடியாது.
எங்களுடைய மாகாணத்தில் அதிகமான ஆசிரியர் வெற்றிடம் காணப்படுகின்ற போதும் அதற்கான தேவை இருக்கின்ற போதும் வேறு எமது பிரதேச ஆசிரியர்களை வேறு மாகாண பாடசாலைகளுக்கு நியமிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எமது தேவை நிறைவடைந்ததற்கு பிறகு வளங்களை வெளி மாகாணத்திற்கு விட்டுக் கொடுக்கலாம். இங்கே ஆசிரியர் வெற்றிடம் இருக்கின்ற போது கல்வி கல்லூரியிருந்து வெளியேறும் ஆசிரியர்களை எங்களுடய மாகாணத்திற்கு நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன், அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள், வெளிமாவட்டத்திலும் வெளி மாகாணத்திலும் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை வருடாந்த இடமாற்ற அடிப்படையில் 3 வருடம் அல்லது 5 வருடம் நிறைவடந்த பின்னர் அந்த பிரதேசத்திற்கு மாற்றித் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
இறக்காமத்தில் கல்வி சமூகம் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். இவர்களின் ஆசிரியர் வெற்றிடத்தினை உடனடியாக பூர்த்தி செய்யும் வகையில் இறக்காமம் பிரதேச அசிரியர்கள் அல்லது வெளி பிரதேசத்திலுள்ள ஆசிரியர்களை நியமித்து அவர்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கல்வி அமைச்சு மற்றும் கல்வி திணைக்கள உயர் அதிகாரிகளை கேட்டுக் கொள்கின்றேன். அத்துடன் கல்வி கல்லூரிகளிலிருந்து வெளியேறும் ஆசிரியர்களின் நியமன விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
11 minute ago
15 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
15 minute ago