2025 ஜூலை 26, சனிக்கிழமை

'50,850 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை'

Thipaan   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எப்.முபாரக் 

திருகோணமலை, கந்தளாய் நீர்ப்பாசனப் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், இம்முறை 50,850 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, கந்தளாய்  நீர்ப்பாசன அதிகாரி ஹேரத் திஸாநாயக்க  தெரிவித்தார். 

நெற்செய்கை மேற்கொள்வதற்காக, வாய்க்கால் துப்பரவு செய்தல், வரம்புகள் செதுக்குதல் மற்றும் வயலில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் போன்ற  ஆரம்ப நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொண்டு வருவதாகவும் வயல் வெளியில் ஆரம்ப நடவடிக்கைகள் பூரணமான முறையில் நிறைவடைந்ததன் பின்பே, கந்தளாய் குளத்திலிருந்து நீர் திறந்து விடப்படும் எனவும் அவர் கூறினார்.

நீர் திறக்கும் செயற்பாடு, அடுத்த மாதம் 25ஆம் திகதிக்குப் பின்பே நடைபெறும் எனவும் கந்தளாய் பிரதேசத்துக்குட்பட்ட அனைத்து விவசாயிகளும் வயல் வெளியில் காணப்படுகின்ற ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை நிறைவு செய்து வைத்திருக்குமாறும் கந்தளாய் நீர்ப்பாசன அதிகாரி, விவசாயிகளை கேட்டுள்ளார்.           


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X