2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கைக்குண்டுகள் மீட்பு

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 17 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம், பொன் ஆனந்தம்

திருகோணமலை நகரின் மடத்தடி சந்திப்பகுதியில் உள்ள ஆலயமொன்றில் பழைய பொருட்களை வைக்கும் அறையிலிருந்து வெடிக்காத நான்கு கைக்குண்டுகள்  நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
குறித்த ஆலயத்தில் புனரமைப்பு வேலை   நடைபெற்று வருகையில் குறித்த அறையை துப்புரவு செய்த வேளையில் இக்குண்டுகள் காணப்பட்டதாகவும் பின்னர் பொலிஸாருக்கு ஆலய நிர்வாகம் தகவல் வழங்கியதனை அடுத்து  குறித்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X