Suganthini Ratnam / 2017 ஜனவரி 16 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீஷான் அஹமட்
சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தங்கபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை இடம்பெற்ற கைகலப்புச் சம்பவம் தொடர்பில் 29 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் இன்று (16) கைதுசெய்துள்ளனர்.
இச்சந்தேக நபர், தனது சகோதரியின் கணவரை பொல்லாலும் கூரிய ஆயுதங்களினாலும் தாக்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலில் காயமடைந்த நபர் மதுபோதையில் குழப்பம் விளைவித்துள்ளார். குழப்பம் விளைவிக்க வேண்டாம் எனக் கூறியும், இந்த நபர் குழப்பம் விளைவித்தமையால், இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த நபர், மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025