2025 மே 20, செவ்வாய்க்கிழமை

450 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு

Princiya Dixci   / 2016 ஜூன் 15 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலை, புல்மோட்டைப் பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 450 குடும்பங்களுக்கு, இலவச குடிநீர் இணைப்புகள் வழங்கும் நிகழ்வு, புல்மோட்டை அரபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17) நடைபெறவுள்ளதாக, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவைச் சேர்ந்த நன்கொடையாளர் ஒருவரினால் வழங்கப்பட்ட 65 இலட்சம் ரூபாய் நிதியுதவியிலேயே குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவுள்ளன.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் குழு தலைவர் ஆர்.எம்.அன்வரின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸிர் அஹமட் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிர், நிதா நிறுவனத்தின் பொறுப்பாளர் ஆதம் பாவா மௌலவி உட்பட பிரதேச கட்சி உறுப்பினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொள்ள உள்ளதாகவும், அன்றைய தினம் மாலை 6.30க்கு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அன்வர் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X