Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜூன் 18 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா, எம்.முபாரக், பொன் ஆனந்தம்
திருகோணமலை, புல்மோட்டை பிரதேசத்திலுள்ள 450 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர்கள் வழங்கும் நிகழ்வு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில், புல்மோட்டை அரபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில், நேற்று வெள்ளிக்கிழமை(17) நடைபெற்றது.
இதில், புல்மோட்டை பிரதேசத்தில் ஏற்கெனவே குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்ட வீடுகளுக்கான நீர்க் குழாய்களையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்துவைத்தார்.
இந்நிகழ்வு, நிதாவுல் ஹைர் நிறுவனத்தினால், சவூதி அரேபியாவைச் சேர்ந்த நன்கொடையாளர் பைஸல் மிலாரியின் அனுசரனையுடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் நஸீர் அஹமட், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர் மற்றும் சட்டத்தரணி ஜே.எம். லாஹீர், நிதா நிறுவனத்தின் பொறுப்பாளர் ஆதம்பாவ மௌலவி, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உயரதிகாரிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து, மாபெரும் இப்தார் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
6 minute ago
21 minute ago
36 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
36 minute ago
54 minute ago