2026 மார்ச் 23, திங்கட்கிழமை

29 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி

Gavitha   / 2016 ஜனவரி 20 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.புஹாரி

சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமான முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தோப்பூர், அல்லைநகர் மேற்கு போன்ற கிராமங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 29 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவுள்ளதா முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் மூதூருக்கு பொறுப்பான கள உத்தியோகத்தர் முஹமட் றினூஸ் தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்ட 29 பயனாளிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட முதற் கட்ட கூட்டம், நேற்று செவ்வாய்கிழமை 2.00 மணியளவில் தோப்பூர் தாருல் ஹிக்மா பாலர் பாடசாலையில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'கடந்த கால யுத்தத்தின் போது, தோப்பூர் பிரதேசம் பாதிக்கப்பட்டிருந்தது. அங்குள்ள மக்களால் விரும்பி கேட்கப்பட்ட உதவிகளையே நாம் செய்வதற்கு முன்வந்துள்ளோம். இதன் மூலம் உங்களது பொருளாதாரத்தை விருத்தி செய்ய முயற்சி செய்வோம்' என்று அவர் கூறினார்.

மேலும், எம்மால் வழங்கப்படும் உதவிகளை விற்பனை செய்ய வேண்டாம் என்றும் அவ்வாறு விற்பனை செய்யப்படும் பட்சத்தில் வழங்கப்பட்டவை யாவும் பறிமுதல் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .