2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கோடரியால் தாக்கியதில் இளைஞர் படுகாயம்

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 23 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீஷான் அஹமட்

மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பச்சநூர் கிராமத்தில் சனிக்கிழமை (22) இரவு 18 வயதுடைய இளைஞர் ஒருவர் கோடரித் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில், மூதூர் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரது தலை, கை மற்றும் இடுப்புப் பகுதியில் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞர்கள் இருவருக்கு இடையில் காணப்பட்ட முன்பகையே இந்தத் தாக்குதலுக்கு  காரணமாக அமைந்தது எனத் தெரிவித்த பொலிஸார்,  மேற்படி இளைஞர் மீது, மற்றைய இளைஞர் கோடரியால் தாக்கியுள்ளார் எனக் கூறினர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்; தலைமறைவாகியுள்ளார். அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X