2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்குமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம், வடமலை ராஜ்குமார்.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட  பாலநகர் பகுதியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் நகர சுகாதாரத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்களை விரைவாக வழங்குவதற்குரிய நடவடிக்கையை எடுக்குமாறு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி கோரிக்கை விடுத்தார்.

சுமார் 79 குடும்பங்களுக்கே காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மூதூர் பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (31) அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது, மாகாணக் கல்வி அமைச்சருடன் சேர்ந்து மாகாண சபை உறுப்பினர்களான கு.நாகேஸ்வரன், ஜே.ஜனார்த்தனன் ஆகியோர் இம்மக்களுக்கு  காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற மனுவைக் கூட்டத்தில் முன்வைத்தனர்.

மேற்படி சுகாதாரத் தொழிலாளர்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மூதூர் நகரைச் சுத்தம் செய்து வருகின்றனர். அங்குள்ள ஏனையோருக்கு காணி ஆவணங்களுடன் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்ட நிலையில், மேற்படி சுகாதாரத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் இன்னும் வழங்கப்படாமல் இருப்பது நியாயமற்ற செயல் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X