Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2016 ஒக்டோபர் 17 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
'கிண்ணியா பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, நாம் அனைத்து நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளோம்' என, துருக்கியின் இலங்கைக்கான தூதுவர் இஸ்கென்டர் ஒக்யாய் தெரிவித்தார்.
கிண்ணியா பிரதேசத்திலுள்ள மீனவர்களனினதும் விவசாயிகளினதும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துமுகமாக, வாழ்வாதாரா வழங்கும் நிகழ்வு கிண்ணியா பொது நூலக மண்டபத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தௌபீக் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மீனவர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான
மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக 80 வள்ளங்களும் 400 வலைகளும், வழங்கிவைக்கப்பட்டதுடன், விவசாயிகளின் வாழ்வாதாதரத்தை மேம்படுத்தும் முகமாக, மண்ணெயில் இயங்கும் 30 நீர் இறைக்கும் இயந்திரங்களும் மின்சாரத்தில் இயங்கும் 30 நீர் இறைக்கும் இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
தூதுவர் இந்த நிகழ்வில் தொடர்ந்தும் பேசுகையில்,
நாங்கள் மக்களின் துயரமான காலத்தில் மட்டுமன்றி அவர்களின் சந்தோஷமான காலத்திலும், மழை காலமின்றி, வெயில் காலத்திலும் உதவி வருகிறோம்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது தெற்கில் வீடுகளையும் அமைத்து கொடுத்திருந்தோம். அது போன்று வடபகுதியில் யாழ்ப்பாணம், மன்னார் போன்ற பகுதிகளிலும் இது போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.
இங்குள்ள ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது முழு நோக்கமாகும் என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எம். எஸ் தௌபீக் பேசுகையில்,
இங்கு விவசாயிகளும் மீனவர்களும் சரி சமமாக இங்கு வாழ்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் நோக்கில் முதற்கட்டமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை இதுவாகும்.
இப்பிரதேசத்தில் 5,000 மீனவர்கள் குடும்பத்தினர் இருக்கிறனர். அதே போன்றே விவசாயிகளும் இருக்கின்றனர். மூதூர் பிரதேசத்திலும் இதே போன்று காணப்படுகின்றனர்.
இதனை வழங்குவதற்காக வாழ்வாதாரம் மிக குறைந்த நிலையில் உள்ளவர்களையே தெரிவு செய்திருக்கிறோம். இதனை இன்னும் வரும் காலத்தில் கட்டம் கட்டமாக முன்னெடுத்துச் செல்வோம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 May 2025
17 May 2025