Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
மத்திய சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தின் வேண்டுகோளின் பேரில், கிழக்கு மாகாணத்திலுள்ள பீ தரத்திலுள் சகல வைத்தியசாலைகளுக்கும் அதற்குரிய சகல வளங்களும் பெற்றுக் கொடுப்பதற்கும் பீ தரத்திலுள்ள கிண்ணியா மற்றும் மூதூர் தள வைத்தியசாலைகள் சமகாலத்தில் ஏ தரத்துக்கு தரமுயர்த்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறும் என, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
கிண்ணியா வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவினர், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் மத்திய சுகாதார பிரதி அமைச்சின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ் ஊடாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.நஸீரை, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (22) சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பீ தரத்திலுள்ள மூதூர் தள வைத்தியசாலையை ஏ தரத்துக்குத் தரமுயர்த்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், பீ தரத்திலூள்ள கிண்ணியா தள வைத்தியசாலையையும் ஏ தரத்துக்குத் தரமுயர்த்தி தருமாறு கோரியே அவர்கள் இந்தச் சந்திப்பை நடத்தினர்.
இதன் போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் ஜே.எம்.குஸைன்தீன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் திட்டமிடல் பிரிவைச் சேர்ந்த வைத்திய அத்தியட்சகர் பிரேம் ஆனந் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
25 minute ago
31 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
31 minute ago
52 minute ago
1 hours ago