2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் செயற்பாடுகள் சரியாக அமையவில்லை'

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

காணாமல் போனோருக்கான அலுவலகம் கொழும்பில் திறக்கப்பட்டுள்ள போதும், அதன் செயற்பாடுகள்  குறிப்பிட்டுக் கூறக்கூடிய வகையில் சரியாக அமையவில்லை என்பதுடன், இது  ஒரு ஏமாற்று நாடகமாக உள்ளது எனவும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோரைக் தேடிக் கண்டுபிடிக்குமாறு கோரி கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக அவர்களின் உறவினர்கள் உணவு தவிர்ப்புப்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாகாண சபை உறுப்பினர் செவ்வாய்க்கிழமை (4) மாலை அங்கு வருகை தந்தபோதே, மேற்கண்டவாறு கூறினார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தின்போதும் யுத்தம் முடிவடைந்த பின்னரும் இதுவரையில் 30 ஆயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

மேலும், சர்வதேச விசாரணையை நடத்துவதற்கு வெளிநாடுகளுக்கான அழுத்தம் பிரயோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .