2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

13 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2017 ஜனவரி 07 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட்

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புறுப்பிட்டிப் பகுதியில் 13 கிலோ 550 கிராம் கஞ்சாவுடன், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த  35 வயது மதிக்கத்தக்க நபரொவரை, நேற்று மாலை, வவுனியா விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்து, குச்சவெளிப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த நபர், கஞ்சாவுடன் கும்புறுப்பிட்டிப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணிப்பதாக, வவுனியா விசேட அதிரடிப்படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவரைப் பின் தொடர்ந்நு கண்காணித்த வவுனியா விசேட அதிரடிப்படையினர், குறித்த நபரைக் கைதுசெய்து குச்சவெளிப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர், குச்சவெளி பொலிஸில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளைக் குச்சவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X