Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில், பதுர்தீன் சியானா
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரின் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை திடீரென்று தீ பரவியதால், வளி பதனப்படுத்திகள் இரண்டும் தரைவிரிப்புகளும் தீக்கிரையாகியுள்ளன.
திருகோணமலை நகரில் அமைந்துள்ள குறித்த அமைச்சரின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் பொருத்தப்பட்டிருந்த குளிர் பதனப்படுத்தி ஒன்றில் ஏற்பட்ட மின்னொழுக்குக் காரணமாக தீ பரவியதாக மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
தனது காரியாலயத்தில் தீ பரவிய வேளையில் காரியாலயத்தில் தான் இருக்கவில்லை என்பதுடன், சர்வதேச முதியோர் தின நிகழ்வுக்கு தான் சென்றிருந்ததாகவும் அவர் கூறினார்.
இச்சம்பவத்தை கேள்விப்பட்ட தான் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து தீயை அணைத்ததாகவும் அவர் கூறினார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago