Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 22 , மு.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
தங்களுக்கு நிரந்தர நியமனம் பெற்றுத் தருமாறு கோரி கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் நாளை செவ்வாய்க்கிழமை ஈடுபடவுள்ளதாக அம்மாகாணத் தொண்டர் ஆசிரியர் சம்மேளனத்; தலைவர் ஆர்.ஜெயமோகன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை அமர்வு நாளையதினம் காலை 9.30 மணிக்கு திருகோணமலை மாவட்டத்திலுள்ள மாகாண சபை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மாகாண சபைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் கூறினார்.
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 330 க்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் உள்ளனர்.
இந்தத் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் பெற்றுத் தருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் அவர் வாக்குறுதி அளித்து ஒன்பது மாதங்களாகின்றன. இருப்பினும், இந்த வாக்குறுதி இதுவரையில் நிறைவேற்றப்படாத நிலையில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானிமானிக்கப்பட்டது. இதன்போது, சரியான தீர்வு வழங்கப்படாவிடின், தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் கூறினார்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026