Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2016 ஜூலை 16 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ஆனந்தம்
திருகோணமலை மூதூர் பிரிவிலுள்ள கங்குவெலி காணி அளவை செய்யும் பணி பிற்போடப்பட்டுள்ளதாக, பிராந்திய நில அளவை அதிகாரி க.சிவானந்தம் தெரிவித்தார்.
குறித்த காணிப் பிணக்குகளைத் தீர்க்கும் வகையில், நேற்று வெள்ளிக்கிழமை (15) காலை அளவை செய்யும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
எனினும், அங்குள்ள விவசாய சம்மேளனங்களைச் சேர்ந்த தமிழ், சிங்கள விவசாயிகள், அளவை செய்வதற்கும் அக்காணிகளை வேறு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்ததுடன், தற்போது அளக்க வேண்டாம் எனவும் கூறியதாலேயே காணி அளவீடு நிறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியதையடுத்து, இப்பணி பிற்போடப்பட்டதுடன் அதிகாரிகள் அலுவலகம் திரும்பினர்.
சம்பவ இடத்தில், ஏற்பட்ட பதட்டத்தையடுத்து பொலிஸார் வருகைதந்ததுடன், கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஜே.ஜனாரத்தனனும் வருகைதந்து, விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .