Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ஆனந்தம்
எனது கணவர், காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே மரணமானார். அவர்கூட இருந்திருந்தால், நான் இன்று நிர்கதியாகியிருக்க மாட்டேன். சம்பவம் நடந்து 20 வருடமானபோதும் எவரும் எம்மைப் பார்க்கவோ தீர்வை வழங்கவோ உதவவோ முன்வரவில்லை என குமாரபுரம் படுகொலையில் பாதிக்கப்பட்ட தங்கவேல் மருதாயி தெரிவித்தார்.
படுகொலை நடந்து இருபது வருடங்கள் நிறைவடைந்துள்ள போதும் தீர்வு எதுவும் இல்லாமல் அல்லல் படுகிறோம். அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில், அண்மையில் நடந்த வழக்கிலும் ஏமாற்றப்பட்டுவிட்டோம். ஆனால், எனது தந்தையையும் கணவரையும் சுட்டவர்களை நான் அடையாளம் காட்டியிருந்தேன். எமக்கு முறையானதொரு தீர்வு வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாலோசனைக்கான செயலணியின் கலந்துரையாடல், முதூர் நகரில் இன்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றது. இங்கு, அதிகளவிலான பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட தங்கவேல் மருதாயி (வயது 76) குறிப்பிடுகையில்,
எமது குமாரபுரம் கிராமத்தில் 26 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், எனது குடும்பம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. தற்சமயம் எந்தவிதமான ஆதாரமும் இன்றி கொட்டிலில் கிடந்து சிரமப்படுகிறேன்.
எனது கணவர் தங்கவேலும் தந்தை கிண்டனன் என்பவரும் இச்சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் உயிருடன் இருந்திருந்தால் இந்த நிலமை எனக்கு ஏற்பட்டிருக்காது
தற்சமயம் நான் யாருமின்றித் துன்பப்படுகின்றேன். எமது கண்முன்னே நடந்த கொடுரம் பற்றி நான் அண்மையில் நடந்த வழக்கிலும் விரிவாக கூறியது மட்டுமன்றி குற்றவாளிகளை இனம் காட்டினேன். என்றாலும் பயன் ஏதும் கிடைக்கவில்லை. முடிவாக ஏமாற்றப்பட்டுள்ளோம். 20 வருடங்கள் கடந்த நிலையிலும் எந்த விதமான ஆதாரமும் இன்றி அவஸ்தைப்படுகின்றோம்.
எமது இந்தப் பாதிப்புக்கு ஒரு முடிவான பதில் தரப்பட வேண்டும். சம்பவம் நடந்த உடனும் பின்னர் நடந்த விசாரணைகளிலும் நாம் துணிந்து நடந்த வற்றை விவரித்தும் தீர்வும் இல்லை எமது வாழ்வும் உயர வில்லை. எனவே, எமது உறவுகளின் படுகொலைக்கு ஒரு முடிவு வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
18 May 2025