Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2016 ஜூன் 12 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார்
'அனல் மின்நிலையத் திட்டம் என்பது, தமிழ் அரசியல் கட்சிகளும் பாதிக்கப்பட்ட மக்களும் உத்தியோகப்பற்ற சிறையில் இருக்கும் போது ஏற்படுத்தப்பட்டவை. அதில், அவர்களது கருத்துக்கள் முறையாக உள்வாங்கப்படவில்லை. ஆயினும், நல்லாட்சி மாற்றத்தின் பின்னர், கடந்த ஆட்சியில் செயற்படுத்தப்பட்டவை அனைத்தும் தவறென புதிய அரசாங்கம் மாற்றியமைத்தபோதும், இத்திட்டத்தை ஏன் மாற்றியமைக்க கூடாது' என இளைஞர் அபிவிருத்தி அகத்தின் மதியுரைஞர் பொ.சற்சிவானந்தம் கேள்வி எழுப்பினார்.
'நிலக்கரி மின்ஆலையில் சம்பூர்?'என்ற நூல் வெளியீடு, சனிக்கிழமை (11) இடம்பெற்றது. அதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்படி தகவலை அவர் வெளியிட்டார்.
பசுமை திருகோணமலை அமைப்பினால், அதன் உறுப்பினர்களில் ஒருவரான டொக்டர் சம்பூர் அ.ஸதீஸ்குமாரால் தொகுக்கப்பட்ட இந்நூலின் முதல்பிரதியை நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் பெற்றுக் கொண்டார்.
அங்கு மேலும் பேசிய அவர் குறிப்பிடுகையில்,
சம்பூர் மக்கள், முகாம்களில் பல ஆண்டுகள் இருந்த காலப்பகுதியில், குறிப்பாக 2006இல் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த சமயத்தில், இதுதொடர்பாக எந்தவிதமான கருத்துக்களையும் மக்களும் தமிழ் மக்கள் சார்பாக முன்வைக்கும் நிலையில் அரசியல் தலைமைகளும் இருக்கவில்லை.
ஆனாலும் அந்த மக்களும் பசுமைத் திருகோணமலை போன்ற அமைப்புகளும் இதற்காக வெளிக்களம்பப் போராடியதன் விளைவாகச் சில மாற்றங்கள் வரும் அறிகுறி தென்படுகின்றன. ஆரம்பம் முதல் இன்று வரை, இது தொடர்பான சகல விடயங்களும் இவ்வறிக்கையில் ஸதீஸ்குமார் முறையாக உள்ளடக்கியுள்ளார்.
அந்த மக்கள் இக்கட்டான நிலைமையில் இருக்கையில் ஏற்படுத்தப்பட்ட இந்தத் திட்ட முயற்சியானது, சகல மக்களுக்கும் பாதிப்பைத்தரும் திட்டமாகும். ஆனால், வேதனையான விடயம் என்னவெனில், யாரும் ஆரம்பத்தில் இதற்காக குரல் எழப்பவில்லை. குறிப்பாக, முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் கூட மௌனம் காத்தன.
இக்கட்சிகளின் தலைமையில் செயற்படும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள், இது தொடர்பாக எதையும் செய்யவில்லை. இது ஓர் அபிவிருத் திட்டம் என்ற போர்வையில் செய்யப்படும் திட்டமாகும்.
இவ்வாறு தான், வடக்கு, கிழக்கின் பல இடங்களில் பல திட்டங்கள் எதிர்காலத்திலும் முன்னெடுக்கபடவுள்ளன. அவைபற்றி இந்த பாதிக்கப்பட மக்களுக்காக உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் கூட கருத்தில் கொள்ளாமை வேதனையான விடயமாகும். இந்தியாவை மக்கள் வெறுக்கவில்லை. அவர்களின் பெயரால் பாதிக்கப்பட்ட மக்களை பாதிக்கச் செய்யும் இத்திட்டத்தையே நாம் எதிர்கிறோம் எனக்கூறுகின்றனர்.
இவ்வாறாக, வடக்கு, கிழக்கில் ஏற்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி விடயங்களை ஆராய்ந்து சிபாரிசுகளை செய்யவும் இவ்வாறான அமைப்பின் தேவை அவசியமானது. எது பொருத்தமானவை, எது பொருத்தமற்றவை எனவும் பரிந்துரைக்க வேண்டிய தேவை தற்காலத்தில் ஏற்பட்டுள்ளன. திருகோணமலையில் பாரிய திட்டமிடல் நடக்கிறது. இது தொடர்பில் எவ்வாறான சூழல் வரும் இதனை பிரதிநிதிகள் மக்கள் மத்தியில் தெளிவூட்ட வேண்டும்.
கடந்த ஒரு வருடத்தில் வடக்கு, கிழக்கில் செயற்படும் எந்தக் கட்சி, இது பற்றிய குழுவை நியமித்து ஆராய்ந்து வருகின்றன.
எனவே, இவ்வாறாக மேற்கொள்ளப்பட்ட அனல் மின்நிலைய திட்டம் அதன் பாதிப்பு மக்கிளின் போராட்டம் பற்றி செய்யப்பட்டமிக முக்கியமான ஆவணமாக இதுவுள்ளன.
இந்த நிலையான அபிவிருத்திக்கு வித்திடக்கூடிய பல போராட்டங்களை, பசுமை திருகோணமலைபோன்ற அமைப்புக்கள் அரசியல் கலப்பின்றி மேற்கொள்ள வேண்டிய தேவை தற்காலத்தில் உணரப்பட்டுள்ளன' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago