Thipaan / 2017 ஜனவரி 22 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் தொடர்புகளைப் பேணி, அவர்களது கருத்துகளையும் உள்வாங்கிச் செயற்பட வேண்டும் என கிழக்குபட்டதாரி ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,
கடந்த காலங்களில் பௌதிக வளப்பங்கீடு, ஆசிரியர் நியமனம் திட்டமிடப்படாத பாடசாலை மேற்பார்வை, வலய ஆசிரியர் இடமாற்றம் போன்வற்றில் மாகாணக் கல்விப் பணிப்பாளரின் தன்னிச்சையான தலையீடுகள் காரணமாக, கிழக்கு மாகாணம் இந்த வருடமும் பெறுபேறுகளில் ஒன்பதாவது இடத்தைத் தக்கவைத்துள்ளது.
வலயக்கல்விப் பணிப்பாளர்கள், தங்கள் வலயங்களில் திட்டமிட்டு, பாடசாலைக்கும் சமூகத்துக்கும் ஆசிரியர்களுக்கும் பாதிப்பு ஏற்பாடாத வகையில் வருடாந்;;த இடமாற்றத்திட்டத்தை வலய மட்டத்தில் செயற்படும் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் பங்கு பற்றுதலுடன் வலய மாணவர்களின் நன்மை கருதி தூர நோக்கோடு செய்;;து வருகின்றனர்.
இந்நிலையில், அவ்விடமாற்றத்திட்டத்தினுள் மாகாணக் கல்விப் பணிப்பாளரின் முறையற்ற தலையீடுகளினால் வலயக்கல்விப் பணிப்பாளர்கள் வலயத்தில் சுயமாக இயங்க முடியாதளவுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
அது மாத்திரமன்றி, வலயங்களிலுள்ள எத்தனையோ பாடசாலைகளில் குறிப்பிட்ட சில பாடங்களை மாணவர்கள் எடுக்காத சந்தர்ப்பங்களில், பட்டதாரி ஆசிரியர்கள் சுகமாகவும் சுமையாகவும் இருந்து கொண்டு காலத்தைக் கழித்துவிட்டு மாதா மாதம் சம்பளத்தை எடுத்து வருகின்றனர்.
அவர்களை பொருத்தமான பாடசாலைகளுக்கு ஆசிரியர் சமப்படுத்தலினூடக நல்லெண்ணத்தோடு, இடமாற்றங்களை வலய மட்டத்தில் செய்து வருகின்றனர்.
இவ்வேளையில் மாணவர்களின் நலனில் அக்கறையில்லாத சமூக சிந்தனையற்ற ஒரு சில ஆசிரியர்கள், அதிபர்கள், பெற்றோர்கள் வலயத்துக்;கும் வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கும் அழுத்தங்களையும் அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தி வருவதனை எமது சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
வலய இடமாற்றத்தினுள் தலையிடுவதைக் குறைத்து, அதிபர், ஆசிரியர்கள் மத்தியில் பிரச்சினைகளையும் குழுக்களையும் உருவாக்காமல் வலயக்கல்விப் பணப்பாளர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் உள்வாங்கிச் செயற்பட்டால் நன்றாக இருக்குமென எமது சங்கம், மாகாணகல்விப் பணிப்பாளரைக் கேட்டுக் கொள்கிறது' என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025