Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ஆனந்தம்
'நாம், கல்வியில் திறமைகாட்டுவோமேயானால், 90 சதவீதமான பிரச்சினைகளுக்கு நாமே தீர்வைக்கண்டு விடமுடியும். இதுபற்றி எமது சமூகம் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்' என, எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்தார்.
திருகோணமலை தேசிய பாடசாலையான ஸ்ரீகோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் ஆரம்பப் பிரிவு பரிசளிப்பு விழா, கல்லூரி அதிபர் செ.பத்மசீலன் தலமையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்றது.
அந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
'அரசியலமைப்பு மாற்றம் அங்கிகரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுமானால், கல்விக்கு அதிகமான அதிகாரங்கள் கிடைக்கப்பெறும். அதன்மூலம் சுதந்திரமாக கல்வி அபிவிருத்தி பற்றிச் சிந்திக்க முடியம். மட்டுமன்றி பல்கலைக்கழகங்களைக்கூட உருவாக்கும் நிலமை ஏற்படும்.
எமது மாணவர்கள், பல்கலைக்கழங்களுக்கு மாவட்ட மட்ட கோட்டா அடிப்படையிலேயே தெரிவு செய்யப்படுகின்றனர். திறமை அடிப்படையில் தெரிவுசெய்யப்படுவது குறைவாக காணப்படுகிறது.
இதனால், தமிழ் மாணவர்களிலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கல்வி, மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்துக்;கும் அவர்களது இனத்துக்கும் நாட்டுக்கும் மிக முக்கியமானதாகும்.
எமது மாணவர்கள், உயர்கல்வியில் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு கோட்டா அடிப்படையிலன்றி, திறமையடிப்படையில் அதிகம் தெரிவாகும் நிலை வரவேண்டும்' என்றார்.
இந்நிகழ்வில், புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய ரீதியில் இரண்டாமிடத்தைப் பெற்ற மாணவன் உட்பட அதிகளவிலான மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், கிழக்கு கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
8 hours ago