Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஜூன் 22 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீசான் அஹமட், எப்.முபாரக்
கல்வியில் வலயங்களுக்கு இடையில் பாகுபாடு காட்டப்படுகின்றமை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாகீர் தெரிவித்தார்.
மேலும், சில ஆசிரியர்களை கஷ்டப்படுத்தி செயற்படுத்தும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பதுடன், ஆசிரியர்களுக்கான இடமாற்றங்களின்போது சரியான பொறிமுறையை கல்வி அமைச்சு கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
கிழக்கு மாகாண சபை அமர்வு செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்றபோது கல்வி சம்பந்தமான தனிநபர் பிரேரணையை முன்வைத்து உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி வலயத்தில் அந்நூரியா மகா வித்தியாலயம், அந்நூரிய்யா கனிஷ்ட பாடசாலை, இலந்தைக்குளம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இவ்வருட ஆரம்பத்தில் பல நாட்களாக ஆர்ப்பாட்டங்கள் பெற்றோராலும் மாணவர்களினாலும் முன்னெடுக்கப்பட்டிருந்தபோது, எந்த அரசியல்வாதிகளும் முன்வரவில்லை.
கிழக்கு மாகாண சபை உறுப்பினராகிய நான் அவ்விடங்களுக்குச் சென்று மாணவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, கல்வி அமைச்சருடன் தொடர்புகொண்டு ஆசிரியர்களின் பற்றாக்குறை சம்பந்தமாக தெரிவித்திருந்தேன். ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையைத் தீர்ப்பதாக கல்வி அமைச்சர் கூறியபோதும், இன்னும் அது தீர்க்கப்படவில்லை' என்றார்.
'மேலும் மூதூர் கல்வி வலயம், திருகோணமலை வடக்கு கல்வி வலயம் மற்றும் கல்குடாக் கல்வி வலயம் போன்றவற்றில் அண்மைக்காலமாக பாகுபாடு காட்டப்படுவதை காணமுடிகின்றது. பாகுபாடு காட்டப்படுவது மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும்' எனவும் அவர் மேலும் கூறினார்.
33 minute ago
38 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
38 minute ago
1 hours ago
1 hours ago