Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜூன் 30 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தின் காணிகள் விடயத்தில் சாதி பேதம் பாராமல் தீர்க்கமான முடிவொன்றைப் பெறவேண்டும். அத்தோடு அனைத்து மக்களுக்கும் சரியான முடிவு கிடைக்க வேண்டும் என கிழக்கு மாகாண கல்வி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் சி. தண்டாயுதபாணி தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் காணிகள் வழங்கள் மற்றும் சுற்றாடலை பாதுகாத்தல் சம்பந்தமான பொதுமக்களுடனான கலந்துரையாடலொன்று திருகோணமலை நகரசபையின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை (30) இடம்பெற்றது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாணத்தின் அதிகமான காணிகளைப் படையினர் தம்வசம் வைத்துக்கொண்டிருக்கின்றனர். அத்தனை காணிகளையும் பொது மக்களிடம் கையளிப்பதே சிறந்தது எனக்கருதுகின்றேன்.
பொது மக்கள் எவ்வளோவே கஷ்ட்டப்பட்டு வாங்கிய அல்லது காடுகளை வெட்டி எடுத்த காணிகளை நாம் பயன்படுத்துவது அழகல்ல. உரியவர்களின் காணிகள் உரியவர்களிடம் சென்றடைய வேண்டும்.
பொது மக்களிடம் பறிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் மற்றும் கரையோரங்களில் வாழ்கின்ற மக்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படல் வேண்டும். இதன் மூலம் எதிர் காலங்களில் எவ்வாரான காணிகள் விடயத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியுமோ அதனை செய்ய வேண்டும். அனைத்து மக்களும் ஒன்றினைந்து செயற்பட வேண்டியதோடு, கட்சிகள் பாராது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால், கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து முழு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன இதன் மூலம் கிழக்கு மாகாணம் காணிகள் விடயத்தில் சில முக்கிய வேலைத்திட்டங்கள் நடைபெறுவதற்கு சாதமாக அமையும் என நம்புகின்றேன்.
அத்தோடு, திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்கத்துக்குரிய அதிகமான காணிகள் காடுகளாக காணப்படுகின்றன இதனைப் பயன்படுத்தி காணிகள் இல்லாத மக்களுக்கு வழங்கினால் சிறப்பாக அமையும் என்றார்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago