2025 ஜூலை 26, சனிக்கிழமை

'சிறுபான்மையினர் தமது உரிமைகளை வெல்ல பலம்பெற வேண்டும்'

Thipaan   / 2016 ஒக்டோபர் 23 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்

'சிறுபான்மைச் சமூகங்கள், தமது உரிமைகளை வென்று கொள்ள பரஸ்பரம் பலத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். கடந்த கால வரலாற்றில், இவ்விரு சமூகங்களும் எதனையும் இன்னும் சாதித்து விடவில்லை என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்' என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேதாவூத் தெரிவித்தார்.

பொதிகை அமுதன் என அழைக்கப்படும் மறைந்த கவிஞர் ஜி.எம்.பரஞ்சோதியின் நினைவு நூல் வெளியீடு, திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'1985ஆம் ஆண்டு காலப்பகுதி, தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் ஆட்சியாளர்கள் பிரித்தாள முற்பட்ட காலப்பகுதியாகும். அதற்காக இஸ்ரேலின் மொஷாட் உளவுப்பிரிவைப்  பயன்படுத்தி, மோசமான முரண்பாட்டை இரு சமூகங்களுக்கிடையிலும் ஏற்படுத்திய காலம்.

அந்தக்காலத்திலும் கூட,  தமிழ், முஸ்லிம் என்ற பேதமில்லாம் நட்பு ரீதியாக, உறவு ரீதியாக செயற்பட்ட ஒரு ஜீவனாக கவிஞர் பரஞ்சோதியை நான் பார்க்கிறேன். அவரை எனக்கு பரஞ்சோதியாக அறிமுகமில்லை. எமது அமைப்பின் கவிஞராகவே நான் அறிந்திருந்தேன்.

பேரினவாத சமூகம், இஸ்ரேலின் மொஷாட்டைப் பயன்படுத்தி இரு சமூகங்களையும் முரண்பட வைத்தது. அது, 1990களில் மேலும் உச்சமடைந்த காலகட்டமாக மாறியது. ஈற்றில், தற்காலத்தில் முஸ்லிம்களின் கட்சிகைளையே பல பிரிவுகளாக பிரித்து, பலவீனமான நிலமைக்கு தள்ளிவிட்டுள்ளன.

இலங்கையின் சிறுபான்மை மக்களான தமிழ் மக்களின் அரசியல் கட்சிகள் பலவீனமடைந்தால், அது முஸ்லிம்களையும் பாதிக்கும், முஸ்லிம்களின் அரசியல்கட்சிகள் பலவீனமடைந்தால், அது தமிழ் மக்களையும் பாதிக்கும், இதனை இரு சமூகமும் உணர்ந்து செயற்படவேண்டியது கட்டாயமான விடயமாகும்;

இந்த பலவீனமான நிலமையில் இருந்து  மீளவேண்டியது, சிறுபான்மைச் சமூகத்துக்கு மிகவும் இன்றியமையாத தேவையாகவுள்ளது. இதனை இன்றும் பலர் உணர்ந்து கொள்ளாமல் இருப்பது கவலையான விடயம். தமிழ், முஸ்லிம்களின் கட்சிகளிடையே தமது  உரிமைகள் தொடர்பாக இன்று வரை எழுத்து வடிவிலான ஓர் உடன்பாடு காணப்படாமல் இருப்பதை இதற்கு நல்ல உதாரணமாகச் சொல்லலாம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X