Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை, சம்பூர் 07ஆம் வட்டாரத்தில் பாழடைந்த கிணற்றிலிருந்து குகதாஸ் தர்சன் என்ற 06வயதுச் சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 15 வயதுச் சிறுவனை எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் மாவட்ட நீதிமன்ற நீதவான் ஐ.என்.ரிஸ்வான் உத்தரவிட்டார்
சம்பூர் 07ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குகதாஸ் தர்சன் என்ற சிறுவன் கடந்த மாதம் 25ஆம் திகதி மாலை காணாமல் போயிருந்த நிலையில், அதே தினம் நள்ளிரவு அந்தப் பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டான்.
சடலத்தின் வயிற்றில் கல்லொன்று கட்டப்பட்டிருந்ததால் சிறுவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட சிறுவனின் வீட்டிலிருந்த 15 வயதான சிறுவன் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago