Niroshini / 2016 நவம்பர் 26 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்
சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் எதிர்வருகின்ற 2017ஆம் ஆண்டிலாவது பிரதேச செயலக ரீதியாக பொருத்தமான செயற்றிட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்தி செயற்படுத்த வேண்டும். இதன் மூலம் சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற பல பிரச்சினைகளுக்கு குறிப்பிட்ட சதவீத்திலாவது தீர்வுகளை வழங்க முடியும் என்று திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்தார்.
திருகோணமலை சிறுவர் அபிவிருத்தி குழுக்கூட்டம் நேற்று (25) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
சிறுவர்களின நலன் தொடர்பில் சகல துறைசார் நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஜனாதிபதி கூட சிறுவர்களின் நலன் தொடர்பில் கூடிய கவனம் செலுதத்துகின்றார்.
சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் வேண்டும். பெண்கள் வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்கு செல்வதனால் சில பிள்ளைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பு என்பன கேள்விக்குறியாக அமைகின்றன.
அத்துடன், சில பிரதேசங்களில் சிறுவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகுவதுடன் தொடர்ச்சியாக பாடசாலைக்கு வருகை தராமலும் இருக்கின்றார்கள். எனவே இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வாக சிறந்த முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
20 minute ago
26 minute ago
27 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago
27 minute ago
32 minute ago