Gavitha / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
'இலங்கையில் குருதிச் சோகை நோயினால் 40 சதவீதமான பெண்களும் 20 சதவீதமான ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஆய்வொன்றிலிருந்து தெரிய வந்துள்ளது' என்று கிண்ணியா பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஏ.எம்.நிசார் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சினால் பாடசாலைகளில் அமுல்படுத்தப்பட்டு வரும் அயன்போலிக் அமில மாத்திரைகள் வழங்கும் வைபவம், நேற்று செவ்வாய்க்கிழமை (05), கிண்ணியா முஸ்லிம் மகளீர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
'ஐந்து பெண்களுக்கு இருவரும் ஐந்து ஆண்களுக்கு ஒருவருமாக, குருதிச் சோகை நோயினால் பாதிக்கப்பட்டள்ளனர். பாடசாலைப் பிள்ளைகளுக்கு அயன் போலிக் அமில மாத்திரைகள் வழங்கப்பட்டு வருவது, ஒரு தேசிய செயற்றிட்டமாகும். இந்த விடயத்தில் ஆசிரியர்கள் கவனயீனமாக நடப்பது, ஒரு தேசத் துரோகமாகும். இந்த மாத்திரைகளை தவறாது பிள்ளைகளுக்கு கொடுப்பது வகுப்பாசிரியர்களின் தலையாய கடமையாகும்' என்று அவர் இதன்போது தெரிவித்தார்.
'இத்திட்டத்தின் கீழ், பூச்சி மாத்திரை, இரும்புச் சக்தி, விற்றமின் சீ, போலிக்கமிலம் ஆகிய மாத்திரைகள் வழங்கப்படுகின்றது.
மாணவர்ளுக்கு கற்றல் கற்பித்தலுக்குத் தேவையான இரும்புச் சக்தி குறைபாட்டை இந்த மாத்திரைகள் நிவர்;த்தி செய்கின்றது. சோர்வு. சோம்பல், சோகை, உடல் மெலிதல், முட்டி வயிறு, அடிக்கடி நோய்களினால் ஏற்படும் தாக்கம் போன்றவற்றை இல்லாமல் செய்கின்றது' என்றும் அவர் கூறினார்.
மேலும், 'தேவையான ஒக்சிசன் இதன் மூலம் வழங்கப்பட்டு சுறுசுறுப்பு மற்றும் கிரகித்தல் செயற்பாடு அதிகரித்து மாணவர்களுக்கு கற்றலில் நாட்டம் ஏற்படும். நோய் எதிர்ப்புச் சக்தியை இது அதிகரிக்கும். அத்தோடு பெண்களுக்கு ஏற்படுகின்ற கர்ப்பப்பை பிரச்சினைகள் மற்றும் கர்ப்பப்பை நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றலை பெறலாம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago