2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்தின் மூலம் தீங்கு விளைவிக்க இடமளியோம்'

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

'சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அடிப்படையில் நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்' என கிழக்கு மாகாண  கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள அனல் மின் நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த அனல் மின் நிலையத் திட்டம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் முன்வைக்கப்படவுள்ள தனிநபர் பிரேரணைக்கு ஏனைய மாகாண சபை உறுப்பினர்கள் ஆதரவளிக்குமாறு கோரியும் மாகாண சபைக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை பசுமை திருகோணமலை அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இ;ங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'எதிர்வரும் மே மாதம் 4ஆம் 5ஆம் 6ஆம் திகதிகளில் எதிர்க்கட்சித் தலைவரும் த.தே.கூ.வின் தலைவருமான இரா.சம்பந்தன் திருகோணமலைக்கு வரவுள்ளார். அவ்வேளையில் சம்பூர் அனல் மின் நிலையத் திட்டம் தொடர்பில் த.தே.கூ.வின் நிலைப்பாடு, இந்த அனல் மின் நிலையத் திட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு, இதனை மக்கள் எதிர்ப்பதற்கான காரணங்கள் உள்ளிட்டவை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் த.தே.கூ.வின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துரையாடவுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த அனல் மின் நிலையத் திட்டம் தொடர்பில் இந்திய அரசாங்கத்துடனும் கலந்துரையாடுவதற்கும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .