2025 மே 15, வியாழக்கிழமை

'சர்வதேச ஒப்பந்தங்களை நிறைவேற்றாமையால் நாடு அடிபணிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது'

Suganthini Ratnam   / 2017 மார்ச் 30 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம், வடமலை ராஜ்குமார், எப்.முபாரக்

சர்வதேசத்துடன் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுடன், அந்த ஒப்பந்தங்களை   நிறைவேற்றாததன் காரணமாக சர்வதேசத்துக்கு தற்போது நாடு அடிபணிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

'எதிர்காலம் உதயமானது' எனும் தொனிப்பொருளில் யொவுன்புர நிகழ்வு, திருகோணமலை மெக்கெய்ஷர் விளையாட்டு மைதானத்தில்  மிகவும் கோலாகலமாக புதன்கிழமை (29) மாலை ஆரம்பமாகியது. இதன் ஆரம்ப நிகழ்வில்  பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது,'தற்போது எமது நாட்டில் பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன. அச்சவால்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.  அவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டுமாயின்,  நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியுள்ளது. நாம் ஒற்றுமையுடன்  செயற்பட்டு  முன்னேறக்கூடிய நிலைமையை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.

'மேலும், நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டுமாயின், இளைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது' எனவும் அவர் கூறினார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .