2025 மே 16, வெள்ளிக்கிழமை

டெங்கு அபாயம்; தனியார் கல்வி நிலையங்கள் பூட்டு

Suganthini Ratnam   / 2017 மார்ச் 08 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

திருகோணமலையில் டெங்கு நோய் அபாயம் காணப்படுவதால், தனியார் கல்வி நிலையங்களை தற்காலிகமாக 2 வாரங்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, சுகாதார வைத்திய அதிகாரி என்.விஜயகுமார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் ஆகியோருக்கும் தனியார் கல்வி நிலைய உரிமையாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் செவ்வாய்க்கிழமை (7) மாலை நடைபெற்றது.

திருகோணமலையில் டெங்குக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தோரில் 2 மாணவர்கள் அடங்குவதுடன், மாணவர்களே டெங்குக் காய்ச்சலால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாகாணக் கல்வி அமைச்சர் தெரிவித்தார். எனவே, தனியார் கல்வி நிலையங்களை  தற்காலிகமாக மூடுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், தனியார் கல்வி நிலையங்களை நேற்று (8) முதல் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .