Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 மார்ச் 23 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
டெங்குக் காய்ச்சல் காரணமாக கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட 3 நாள் விசேட விடுமுறைக்குப் பதிலாக சனிக்கிழமை பாடசாலைகளை நடத்துவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என அவ்வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட் லெப்பை, இன்று (23) தெரிவித்தார்.
இந்நிலையில், நாளையும் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதியும் எதிர்வரும் 22ஆம் திகதியும் பாடசாலைகள் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.
தீவிரமாகப் பரவிவந்த டெங்குக் காய்ச்சல் காரணமாக கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வரவில் வீழ்ச்சி காணப்பட்டிருந்தது. இதனை அடுத்து, மேற்படி வலயத்திலுள்ள பாடசாலைகளையும் மூடுவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்ட நிலையில், அவ்வலயத்திலுள்ள 66 பாடசாலைகளும் கடந்த 15ஆம் திகதியிலிருந்து 17ஆம் திகதிவரை மூன்று தினங்களுக்கு மூடப்பட்டன. இந்நிலையில், மேற்படி பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு, நடைபெற்று வருகின்றது.
இருப்பினும், கிண்ணியா நகர்ப்புறப் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களின் வரவில் வீழ்ச்சி காணப்படுகின்றது எனவும் அவர் கூறினார்.
6 minute ago
12 minute ago
15 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
15 minute ago
52 minute ago