2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தோப்பூர் விபத்து: சாரதிக்கு விளக்கமறியல்; பராமரிப்புப் பிரிவில் சிறுவன் தடுப்பு

Thipaan   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா, தீசான் அஹமட்

 

திருகோணமலை, தோப்பூர் செல்வநகர் பகுதியில் நேற்று (25) இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட டிப்பர் சாரதியை எதிர்வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட மூதூர் பதில் நீதவான் இல்யாஸ் முபாரிஸ், சிறுவனை சிறுவர் பராமரிப்புப் பிரிவில் தடுத்துவைக்குமாறும் உத்தரவிட்டார்.

 

மோட்டார் சைக்கிளை செலுத்தியதாக கூறப்படும் தோப்பூர் செல்வநகர் பகுதியைச்சேர்ந்த குறித்த சிறுவனே (நிஜாம்தீன் சப்ராஸ் 14 வயது) சிறைச்சாலை பராமரிப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

விபத்து தொடர்பில் கைதுசெய்யப்பட்ட லொறி சாரதியும் சிறுவனும், மூதூர் பதில் நீதவானின் வாசஸ்தலத்தில், நேற்று (25) ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர், மேற்கண்ட உத்தரவைப்பிறப்பித்தார்.

உயிரிழந்தவர்களின் சடலம், பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனை முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவன் செலுத்திய மோட்டார் சைக்கிள் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மெற்கொண்டு வருவதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X