Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 செப்டெம்பர் 27 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
'பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள மலையக பெருந்தோட்ட மக்கள், தீபாவளியை எவ்வாறு கொண்டாடப் போகின்றோம் என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே, இம்மக்களுக்கு தீபாவளி முற்பணமாக 15,000 ரூபாயை, ஒக்டோபர் மாத சம்பளத்துடன் இணைத்து வழங்க வேண்டும்' என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தோட்டக் கம்பனிகளிடம் கடிதமூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் இ.தொ.காவின் தொழிலுறவு இயக்குநர் எஸ்.ஜோதிக்கண்ணன், தோட்டக் கம்பனிகளுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது,
'வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளது. ஒரு பக்கம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மின்னல் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், தோட்ட மக்கள் எவ்வாறு இந்த பண்டிகையை கொண்டாடப் போகின்றோம் என்ற அச்சத்தில் வாழ்கின்றனர்.
வருடத்தில் ஒருமுறை வருகின்ற தீபாவளியை சிறப்பாக கொண்டாட வேண்டும். எனவே, வழமையைவிட இத்தொகை அவர்களின் கைகளில் கிட்ட வேண்டுமென்பதே இ.தொ.கா வின் எதிர்பார்ப்;பாகும்.
சம்பள உயர்வுக்கும் தீபாவளி முற்பணத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
எவ்வாறாயினும், ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி வழங்குகின்ற சம்பளத்தோடு, இந்த 15,000 ரூபாய் முற்பணத்தையும் இணைத்து வழங்க வேண்டியது தோட்ட நிர்வாகங்களின் பாரிய பொறுப்பாகும். இதில் காலதாமதம் ஏற்படக் கூடாது.
அதேபோன்று, தனியார் தோட்டங்களிலும் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கும் இத்தொகை வழங்கப்பட வேண்டுமென்பதில் இ.தொ.கா உறுதியாக உள்ளது' என்றார்.
4 minute ago
19 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
19 minute ago
23 minute ago