Niroshini / 2016 பெப்ரவரி 06 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி
மூதூர், நொக்ஸ் வீதியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவி, பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கு செலுத்த வேண்டிய தாபரிப்பு பணத்தை செலுத்த தவறியமையினால் அவரை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு, மூதூர் நீதிவான் ஐ.எம்.றிஸ்வான் உத்தரவு பிறப்பித்தார்.
குறித்த நபர் மனைவி, பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் 2012ஆம் ஆண்டிலிருந்து அவர்களுக்கு செலுத்த வேண்டிய தாபரிப்பு பணத்தில் 2 இலட்சம் ரூபாய் நிலுவையில் இருந்து வந்துள்ளது.
இந் நிலையில் குறித்த நபரின் மனைவி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, அவர் நேற்று மூதூர் நீதிமன்றில் ஆஜராக வேண்டும்.
ஆனால் அவர் நீதிமன்றில் ஆஜராக தவறியமையினால் அவருக்கு பிடிவராந்து பிறப்பித்து நீதிவானினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026