2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

திருகோணமலையில் வரட்சியால் 5,214 குடும்பங்கள் பாதிப்பு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 19 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

தற்போது ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் 5 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட 24 கிராமங்களில் 5,214 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர்  எஸ்.சுகுணதாஸ் தெரிவித்தார்.

தற்போதைய வரட்சியின் பாதிப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில்  புதன்கிழமை (18) நடைபெற்றதே, அவர் இதனைக் கூறினார்.

இந்நிலையில், வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. இக்குடிநீர்த் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் குடிநீர் விநியோகத்துக்காக  48 பௌசர்களும்  469 பிளாஸ்டிக் நீர்த்தாங்கிகளும் தேவைப்படுவதாகவும் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X