2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

'நீதி வழங்கவேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உள்ளது'

Thipaan   / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

யுத்த காலத்தின் போது, பல ஆள்கடத்தல்கள், படுகொலைகள் கூட்டாகவும் தனியாகவும் நடந்து முடிந்தன. இந்த சம்பவங்கள் யுத்தத்தில் ஈடுபட்ட அனைத்து தரப்புகளுமேதான் காரணம். இருந்தும் இலங்கை அரசாங்கம் இதற்கான நீதியையும் நியாயத்தையும் எம்மக்களுக்கு வழங்கவேண்டிய பொறுப்பும் கடப்பாடும் உள்ளதை, தட்டிக் கழிக்க முடியாது என, மூதூர் பிரஜைகள் குழு வலியுறுத்தியுள்ளது.

அக்குழுவின் தலைவர் சிவசிறி இ.பாஸ்கரன் குருக்களால், இன்று (15) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  

கடந்த யுத்தகாலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட அனைத்துக்குமான நீதி விசாரணை வேண்டும்.

மூதூர் பிரஜைகள் குழுவானது கடந்தவாரம் பாதிக்கப்பட்ட மக்களுடன் தனி தனியாக கிராமங்களுக்கு சென்று கலந்துரையாடினோம். அந்த வகையில் மக்களின் மனவேதனைகள் ஆதங்கங்களை எமக்கு தெளிவாக கூறினர்.

நாம் பெற்றுக் கொண்ட நேரடி தகவல்களின் ஒரு முக்கிய விடயத்தையும் அரசாங்த்தின் கவனத்துக்குக் கொண்டு வருகின்றோம்.

1987ஆம் ஆண்டு, அமைதி காப்பு படை என்ற பெயரில் இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்து அமைதி அவலமாக மாறி, புலிகளுடன் ஒரு யுத்தத்தை நடத்தியது. அக்கால கட்டத்தில் அவர்களுடன் பல ஆயுத குழுக்கள் சேர்ந்து நின்று யுத்தம் புரிந்தது சகலரும் சர்வதேசமும் அறிந்தவிடயம்.

இக்காலகட்டத்தில் தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர். காணாமல் ஆக்கப்பட்டனர், மக்களிடம் கப்பம் பெறப்பட்டன. இந்த காலத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், பெண்கள், அங்கவீனமானவர்கள் இன்னும் பல சொல்லென்னா துன்ப கஷ்டங்களை அனுபவிப்பதை இப்போதுதான் வெளிவிடுகின்றனர்.

எனவே, இவர்களுக்கான நீதியும் நியாயமும் நிலையான வாழ்வாதாரமும் வழங்க வேண்டும் என்பதோடு, இலங்கையில் நடைபெற இருக்கின்ற விசாரணைகளில் இவர்களையும் கட்டாயம் பங்கேற்க செய்ய வேண்டும் என்று, இலங்கை அரசை பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக மூதூர் பிரஜைகள் கேட்டுக் கொள்கின்றது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

        


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .